Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பளத்தை உயர்த்தி தாங்க.. அமைச்சர் பொன்முடி காலில் விழுந்து கெஞ்சிய பெண் ஊழியர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து பெண் ஊழியர் கோரிக்கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் இன்று செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றார்.

ponmudi dmk vandalur zoo

உயிரியல் பூங்காவில் புதிய பேட்டரி வாகனங்கள் மற்றும் புதிய 3டி திரையரங்களை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். அமைச்சர் பொன்முடி வந்திருப்பதை அறிந்ததும் பூங்காவில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பேட்டரி காரில் சென்ற அமைச்சர் பொன்முடியை மறித்து கோரிக்கை மனு வழங்கினர். இந்த வேளையில் பெண் ஊழியர் ஒருவர், அமைச்சர் பொன்முடியை கும்பிட்டபடி தங்களின் கோரிக்கையை முன்வைத்தார். அப்போது அந்த பெண் ஊழியர், ‛‛ நாங்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறோம். மிகவும் குறைவான கூலிக்கு தான் பணி செய்கிறோம்.

ponmudi dmk vandalur zoo

சம்பளம் குறைவு என்றாலும் கூட நாங்கள் உயிரியல் பூங்கா நிர்வாகத்தை நம்பி தான் வேலை செய்து வந்தோம். ஆனால் இப்போது இன்னொரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான வேலையை செய்து வருகிறோம். நாளைக்கு எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட நாங்கள் யாருகிட்ட போய் கேட்க முடியும்.

ponmudi dmk vandalur zoo

நாங்கள் 213 பேர் பணி செய்கிறோம். நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான். சம்பள உயர்வு வேண்டும். நாங்கள் வேலை செய்வதற்கு ஏற்ப சம்பள உயர்வு வேண்டும். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'' என்று கூறி திடீரென்று அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+