வாணியம்பாடியில்.. கறி வாங்க ஆட்டுத்தொட்டிக்கு போன நபர்.. இப்படியும் நடக்குமா? திகிலில் திருப்பத்தூர்
திருப்பத்தூர்: "அப்படித்தான் கெட்டுப்போன கறியை விப்போம், உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ" என்று பொதுமக்களிடம் கெத்தாக பேசினாராம் கறிக்கடைக்காரர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இப்போதெல்லாம் இளைஞர்களும், சிறுவர்களும் வீட்டில் உண்பதைவிட, ஓட்டலில் சாப்பிடுவதையே பெருமளவு விரும்புகிறார்கள்.. முக்கியமாக, ஷவர்மா, சிக்கன் பர்கர், கிரில் சிக்கன், தந்தூரி, ஐட்டங்களை கடைகளில் வாங்கி சாப்பிட பிரியப்படுகிறார்கள்.

பள்ளி மாணவி: ஆனால், சுகாதாரமின்றி உணவுப்பொருட்களை சில கடைகளில் விற்பது அதிகரித்து வருகிறது.. நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி இறந்த பிறகும்கூட, கேரளாவில் மீண்டும் மீண்டும் உயிரிழப்புகள் நடந்ததை காண முடிந்தது. அதனால்தான், உணவு விஷயத்தில் அதிகாரிகள் கண்டிப்பு காட்டி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் மட்டுமின்றி இறைச்சி கடைகளிலும் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்
இப்படித்தான் சமீபத்தில், சென்னையில் உள்ள விருதுநகர் பெயர் கொண்ட ஓட்டல் ஒன்றில், திடீரென அதிகாரிகள் சோதனையிட்டனர்.. கிச்சனிலிருந்த ஃபிரீசரை திறந்து பார்த்ததுமே குப்பென்று துர்நாற்றம் வந்துள்ளது.

பிரயாணம்: கெட்டுப்போன சாப்பாட்டை வைச்சிருக்கீங்களா? இதையெல்லாம் மனுஷன்தானே திங்கறான்? 100 கிலோ மீட்டர், 500கிமீ தூரம் பிரயாணம் செய்துட்டு சாப்பிட்ட வர்றாங்க, அவங்களுக்கு இப்படித்தான் தருவீங்களா? இவ்ளோ ஈக்கள் இருக்கே? இதெல்லாம் சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏன் வராது? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? என்று அதிகாரிகள் கேட்டனர். அத்துடன் ஒரு தட்டை எடுத்து, அந்த சாப்பாட்டை போட்டு, இந்தாங்க, இதை நீங்களே சாப்பிடுங்க என்று கேட்டிருந்தனர்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒருபக்கம் இவ்வாறு சோதனைகளை மேற்கொண்டுவந்தாலும், மறுபக்கம் பொதுமக்களும் அலர்ட் ஆகி வருகிறார்கள். இதோ திருப்பத்தூரில் ஒருவர் சிக்கி உள்ளார்.
வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்துள்ளது கோனாமேடு என்ற பகுதி.. இங்கு பிரபலமான ஆட்டுத்தொட்டி ஒன்று இயங்கி வருகிறது.. இங்கு தினமும் புதியதாக ஆடு வெட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம்.. அதனால், வாணியம்பாடி தவிர, சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் இங்கு கறி வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், அம்பூர்பேட்டையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்ற ஆட்டோ டிரைவர், ஆட்டுக்கால், ஆட்டின் தலை இரண்டையும் இங்கு வந்து வாங்கி சென்றுள்ளார்.
வீட்டுக்கு கொண்டு சென்று, அந்த கறியை நன்றாக சுத்தம் செய்துள்ளார்.. பிறகு, சமைக்க துவங்கியபோதே துர்நாற்றம் அடிக்க துவங்கியுள்ளது.. அப்போதுதான் அது, கெட்டுப்போன பழைய கறி என்று பாலசந்தருக்கு தெரியவந்துள்ளது..
ஆட்டுத்தொட்டி: இதனால், அதிர்ச்சி அடைந்த பாலச்சந்தர், அந்த ஆட்டுக்கறியுடன், ஆட்டுத்தொட்டிக்கு விரைந்து சென்றார்.. கடைக்காரரிடம் கெட்டுப்போன கறியை காட்டி, இப்படித்தான் பழைய கறியை விற்கிறதா? உயிரைவிட பணம்தான் முக்கியமா? எவன் செத்தாலும் கவலையில்லையா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு கறிக்கடைகாரர் எந்தவித ரியாக்ஷனும் காட்டவில்லையாம்.. டென்ஷனும் ஆகவில்லையாம்.. "அப்படித்தான் கெட்டுப்போன கறியை விப்போம், உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ" என்று கேஷுவலாக பதில் சொல்லி உள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பாலசந்தர், வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..
கோரிக்கை: இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் தரமற்ற உணவு பொருட்களை விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications