திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்.. விஏஓ கடத்தியதாக புகார்... போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை விஏஓ கடத்தி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீரென மாயமாகியுள்ளார். அவரை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கடத்திச் சென்றதாக பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
திருக்கோவிலூரை அடுத்த மனம்பூண்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வேலை விஷயமாக விஏஓ குணசேகரன் பரனூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

காதலாக மாறிய பழக்கம்
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது.

திருமணத்துக்கு ஏற்பாடு
இந்த விஷயம் விக்னேஷ்வரியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் விக்னேஷ்வரியை கண்டித்துள்ளனர். மேலும் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணமும் பேசி முடித்துள்ளனர்.

விஏஓ கடத்திவிட்டதாக புகார்
இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த விஏஓ குணசேகரன், விக்னேஷ்வரியை அழைத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் விஏஓ குணசேகரன் தங்கள் மகளை கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விஏஓ குணசேகரனையும் மாயமான இளம்பெண்னையும் தேடி வருகின்றனர். விஏஓ பெண்னை கடத்திவிட்டதாக வெளியான தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications