விஏஓ, நகராட்சி ஊழியர், லைன்மேன்.. பட்டா முதல் பாகப்பிரிவினை வரை! தமிழகத்தை அதிரவிட்ட அரசு அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி : ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த லஞ்ச விவகாரங்கள் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் சிக்கி வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு விஏஓ முதல் தாசில்தார்கள் வரை விதிவிலக்கில்லை.

திருவண்ணாமலை: 2 நாட்களுக்கு முன்புகூட, திருவண்ணாமலை விஏஓ லஞ்சம் வாங்கி சிக்கினார்.. தேவனாம்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இங்குள்ள விஏஓ காந்தி, ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவரிடம், சிட்டா மற்றும் அடங்கல் வழங்குவதற்காக லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுத்தால்தான், பட்டா, சிட்டா தர முடியும் என்று கறாராக சொல்லவும், அதிர்ச்சி அடைந்த விவசாயி, விஏஓ ஆபீஸ் முன்னாடியே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டார். இப்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.. உயிரையே காவு வாங்கும் அளவுக்கு இந்த லஞ்ச விவகாரம் சென்றுள்ள நிலையில், இன்னொரு விஏஓ லஞ்சம் கேட்டு அசிங்கமாக கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்துள்ளது ரங்கநாதபுரம்.. இங்கு வசித்து வரும் மாற்றுத்திறனாளி சக்திவேல்.. இவருக்கு 48 வயதாகிறது.. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பூர்வீக சொத்து, 37 சென்ட் இடம், சிறுவங்கூர் கிராம எல்லையில் உள்ளது.. இந்த இடத்தை சக்திவேல் உட்பட அவரது சகோதரர்கள் 3 பேர் கடந்த 2013ம் ஆண்டு பாகப்பிரிவினை செய்து கொண்ட நிலையில், பட்டா மாற்றம் செய்ய முடிவெடுத்தார்கள்..
இதற்காக, சக்திவேல் கடந்த 1ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்து, சிறுவங்கூர் விஏஓ சம்பத் என்பவரை அணுகினார்.. அப்போது வி.ஏ.ஓ., பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சக்திவேல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, நேற்று காலை சிறுவங்கூர் இ-சேவை மையத்தில் இருந்த புரோக்கர் மூலம் சக்திவேல் கொடுத்தார்.
புரோக்கர்: அந்த பணத்தை விஏஓ அலுவலகத்தில் சம்பத் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சம்பத்தையும், சிறுவங்கூரை சேர்ந்த 23 வயதுடைய புரோக்கர் பிரவீன்குமார் என்பவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.. இதற்கு பிறகு, விஏஓ அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.. கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இதுபோலவே, பண்ருட்டியிலும் நகராட்சி ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார்.. திருவதிகையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில், துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. 10 வருடம் பணி நிறைவு செய்ததால், தேர்வுநிலை பணியாளராக நியமனம் செய்து, ஊதிய உயர்வு அளிக்கும்படி நகராட்சியில் மனு அளித்தார்.
நகராட்சி அலுவலர்: அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து, ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி, நகராட்சி அலுவலக சுகாதாரப் பிரிவில் உதவியாளராக பணிபுரியும் கதிரவன் என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. இறுதியில் கதிரவைனையும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்..
அதேபோல, விழுப்புரம் கண்டாச்சிபுரத்திலும், மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். முருகதாஸ் என்பவர், மின் இணைப்பு பெற பல மாதங்களுக்கு முன் பணம் செலுத்தியும், இணைப்பு வழங்கவில்லை.. அதனால், லைன்மேன் பலராமன் என்பவரிடம் கேட்டதற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் கேட்டாராம்.. இறுதியில் பலராமனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அதிரடிகள்: ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில், அரசு அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை லஞ்சம் பெற முயல்வதும், லஞ்சத்தை பெற்று கைதாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications