மதுரை "டான்" வரிச்சியூர் செல்வம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!
மதுரை: குற்றச்செயல்களில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பிரபல தாதா வரிச்சியூர் செல்வம் உட்பட 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்த மதுரை மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், மாநில பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வரிச்சியூரைச் சேர்ந்த செல்வம், செந்தில், சுப்பிரமணி, தேனியைச் சேர்ந்த பார்த்திபன், மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த ரூபேஸ்தீன் பாவா ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று, மதுரை செல்லூரைச் சேர்ந்த பாண்டித்துரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மதுரை அண்ணாநகர் கிழக்குத் தெரு சாலையில் மாநகராட்சிக் குப்பைத் தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கீரைமணி என்ற மணிமாறன் குப்பைத் தொட்டியில் குண்டுகளை வீசியதாகவும், இதில் சில ரவுடிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் கூறினர். நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் (45), அவரது கார் ஓட்டுநர் பார்த்திபன் (38) ஆகியோர் மதுரை மாவட்ட 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நவம்பர் 12ஆம் தேதி சரணடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வரிச்சியூர் செல்வம், கொலை, கொலை முயற்சி, பணம் பறித்தல் உள்பட சுமார் 25 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications