களைகட்டும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரம் – வீதிவீதியாக வாக்கு சேகரிக்கும் “எம்.ஜி.ஆர்கள்”…!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வருகின்ற 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து எல்லா கட்சியினரும் பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக, திமுக என்று கட்சிகளும், அதன் தொண்டர்களும் கூட பரபரப்பாகவே காணப்படுகின்றனர். எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தால் பிரச்சாரத்திற்கு புதுமையான வழிகளையும் கையாண்டு வருகின்றனர்.

சமூக வலைதள பிரச்சாரம்:
நேரடியாக மட்டுமல்லாமல் சில தலைவர்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் மூலமாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்.ஈ.டி திரை பிரச்சாரம்:
நரேந்திர மோடியின் பாணியில் பெரிய, பெரிய எல்.ஈ.டி திரைகளை வைத்து பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுள்ளனர்.

வீதி வீதியாக:
ஸ்ரீரங்கத்தில் இடைத் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. அதிமுக, திமுக , பாஜக உள்ளிட்ட கட்சியினர் வீதி, வீதியாக, கிராமம், கிராமமாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உற்சாகத்தில் அதிமுக:
ஏற்கனவே ஜெயலலிதா கோலோச்சிய தொகுதி என்பதால் இதில் அதிமுகவினரின் பிரசாரம் நிறையவே உற்சாகத்துடன் காணப்படுகிறது.

வாக்கு சேகரிக்கும் எம்.ஜி.ஆர்:
அதிமுகவினர் எம்.ஜி.ஆர் வேடம் இட்டவர்களை வைத்து கிராமம், கிராமமாக பிரசாரம் செய்து வருகின்றனர். எம்ஜிஆர் வேடம் போட்டவர்களை வேனில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துச் சென்று எம்.ஜி.ஆரே வாக்கு கேட்பது போல காட்சியை ஏற்படுத்துகின்றனர்.

ஆடலும், பாடலும்:
இதுதவிர எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு ஆடல், பாடலும் களை கட்டுகிறது. அவர்களின் குத்தாட்டத்துக்கும் குறைவில்லை. தலைவர்களின் பிரசாரத்திற்கு முன்பாக இந்த எம்.ஜி.ஆர்கள் மற்றும் அழகிகளின் குத்தாட்டம், நடனம், பாடல் களை கட்டுகிறது.

கமகமக்கும் பிரியாணி விருந்து:
பிரசாரத்திற்கு வருவோருக்கான வி்ருந்தோம்பலும் சத்தம் இல்லாம் ஜோராக நடக்கிறது. பிரியாணி விருந்துக்கும் பஞ்சம் இல்லை. டாஸ்மாக்குகளுக்கு நல்ல தீனிதான் இந்த தேர்தல் நேரத்தில். மறைமுகமாக சரக்கு சப்ளையும் களை கட்டுகின்றது.

களத்தில் நடிகர்கள்:
இந்நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க நடிகர்கள் ஜே.கே. ரித்தீஷ் வையாபுரி ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர். இந்த மூவரும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

கோமாளி வேடத்தில் போண்டா:
ஸ்ரீரங்கத்தில் நடந்த பிரசாரத்தின்போது நடிகர் போண்டா மணி கோமாளி போல வித்தியாசமான கெட்டப்பி்ல் வந்து வாக்கு சேகரித்துள்ளார்.

கலகலப்பான கிராமிய நடனங்கள்:
ஸ்ரீரங்கம் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களே அதிகமென்பதால் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமிய நடனங்களும் பிரச்சாரத்தில் சூடுபிடிக்கின்றது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications