For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரசாரம் பண்றேன், ஏதாச்சும் தொகுதியில் போட்டியிடுகிறேன்.. தலைவர் பதவி வேணாம்.. வாசன்

Google Oneindia Tamil News

சென்னை: ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். தமிழகம் பூராவும் போய் பிரசாரம் பண்றேன். ஆனால் இந்தத் தலைவர் பதவியெல்லாம் வேண்டாம் என்று கட்சி மேலிடத்திடம் கூறி விட்டாராம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.

மறுபடியும் தலைவர் பதவியை ஏற்க வாசன் தயக்கம் காட்டுவதையே இது நிரூபிப்பதாக உள்ளது.

தலைவர் பதவிக்கு மறுபடியும் வாசன் முயல்கிறார் என்ற செய்திகள் கிளம்பிய நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனியா, ராகுல் கூப்பிட்டாங்களாமே...

சோனியா, ராகுல் கூப்பிட்டாங்களாமே...

கடந்த 13-ம் தேதி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாசனை வரவழைத்தனர்.

தலைவர் பதவியை ஏத்துக்குங்க வாசன்

தலைவர் பதவியை ஏத்துக்குங்க வாசன்

அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் வருமாறு வாசனுக்கு இருவரும் அழைப்பு விடுத்தார்களாம்.

அதெல்லாம் வேண்டாம் ஜி

அதெல்லாம் வேண்டாம் ஜி

ஆனால் உடனே அதை மறுத்து விட்டாராம் வாசன். தலைவர் பதவி வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம்.

பிரசாரம் செய்கிறேன், போட்டியிடுகிறேன்

பிரசாரம் செய்கிறேன், போட்டியிடுகிறேன்

தமிழகம், புதுவையில் பிரசாரம் செய்யத் தயார். ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். மற்றபடி தலைவர் பதவி வேண்டாமே என்று கூறி விட்டாராம் வாசன்.

மடக்கத்தானே இதெல்லாம்

மடக்கத்தானே இதெல்லாம்

முன்பு தனிக்கட்சி தொடங்க வாசன் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது. இதை மனதில் கொண்டுதான் தலைவர் பதவியில் உட்கார வைத்து வாசனை முடக்க காங்கிரஸ் மேலிடம் கருவதாக தெரிகிறது.

அதை விட முக்கியமான காரணம்

அதை விட முக்கியமான காரணம்

தமிழகத்தில் தற்போது காங்கிரஸுக்கு எதிராக எதிர்ப்பு அலை ரெக்கை கட்டிப் பறக்கிறது. யார் வந்து பிரசாரம் செய்தாலும் காங்கிரஸ் தேறுமா என்பது சந்தேகம்தான். எனவே தலைவர் பதவியில் வாசனை உட்கார வைத்து தோல்விக்கு அவரை பொறுப்பாளியாக்கி விட்டு, அவரது தனிக்கட்சி கனவுக்கும் பொங்கல் வைத்து விடலாம் என்ற நினைப்பிலும் தலைவர் பதவியை தருவதாக மேலிடம் கூறியதாக ஒரு பேச்சு...

எப்படி படுத்து யோசித்தாலும் இந்த அரசியல் புரியவே மாட்டேங்குதே பரந்தாமா..!

English summary
Sources say that G K Vasan has refused to accept the president post of TNCC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X