தமிழுக்காக குரல் கொடுக்கும் உ.பி. தருண் விஜய்... தப்புத் தப்பாய் தமிழை எழுதும் வாசன் காங்கிரஸ்!
சென்னை: தமிழுக்காக இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட பாஜகவின் தருண் விஜய் தீவிரமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் தமிழகத்து அரசியல்வாதிகளோ, தமிழையே தப்புத் தப்பாய் எழுதியும், பேசியும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ல, ள, ழ வித்தியாசம் தெரியாமல் பேசுவோர் தமிழகத்தில் அதிகம்தான். அது பழக்கத்தில் வருவது. குறை சொல்லவும் முடியாது. ஆனால் தப்புதான். சாதாரண ஜனங்கள் பேசினால் பரவாயில்லை. ஆனால் அரசியல்வாதிகளும் தமிழைத் தப்புத் தப்பாக பேசினால் எப்படி..!
இப்படித்தான் சென்னையில் ஒரு தமிழ்க் கொலையை சமீபத்தில் பார்க்க முடிந்தது.

வாசமில்லாத காங்கிரஸ்
ஜி.கே.வாசன் ஒரு கட்சியைத் தொடங்கவுள்ளார். இதற்காக தீவிரமாக ஆதரவு சேர்த்து வருகிறார்கள்.

தம்பிக்கு எங்கள் ஆதரவு
ஜி.கே.வாசன் வீட்டுக்குத் தினசரி அவரது ஆதரவாளர்கள் படை படையாக வந்து ஆதரவைத் தெரி்வித்தவண்ணம் உள்ளனர்.

மகளிர் காங்கிரஸ்
அதேபோல மகளிர் காங்கிரஸ் தொண்டர்களும் கூட்டமாக வந்து வாசனை வாழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது.

பேனரில் இருப்பது என்ன?
இவர்கள் மகளிர் காங்கிரஸ் என்ற பேனருடன் வந்து வாசனை வாழ்த்தினர். பின்னர் வாசன் அவர்கள் மத்தியில் பேசினார். அவருக்குப் பின்னால் மகளிர் காங்கிரஸ் என்ற பேனர் கட்டப்பட்டிருந்தது.

வளமான தமிழகம்..!
அந்த பேனரில் வளமான தமிழகம் என்ற வரி மேலே இருந்தது. அதில் தவறு இல்லை. அடுத்த வரிதான் இடித்தது.

"வளி"மையான பாரதம்
அதாவது வளிமையான பாரதம் என்று போட்டிருந்தனர். அது என்ன "வளி"மையான பாரதம் என்று தெரியவில்லை. "வலி" க்கு வலி எடுக்கும் அளவுக்கு ரொம்ப அழுத்திப் போட்டிருந்தனர் அந்த வார்த்தையை.

ஒரு வேளை இப்படி இருக்குமோ...!
ஒரு வேளை, வளிமண்டலத்தையும் தாண்டி பாரதத்தை வலிமையாக்கப் போகிறோம் என்பதைச் சொல்லாமல் சொன்னார்களா என்றும் தெரியவில்லை.

வெட்கப்பட வேண்டும்
இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட உ.பி மாநில எம்.பியான தருண் விஜய் தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 300 முறை கூறி வருகிறார், பேசி வருகிறார், வாதாடி வருகிறார். ஆனால் "தமிழ்த் தாத்தா" மூப்பனாரின் வாரிசுக்கு ஆதரவு தெரிவிப்போர் இப்படித் தமிழைத் தாறுமாறாக கிழித்து தோரணம் தொங்க விடுவது கொடுமைதான்.

கழகத்தின் பாோர்"வாலே"...!
இதேபோல சமீபத்தில் ஒரு சுவர் விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில், மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்து, அருகில் கழகத்தின் போர்வாலே என்று போட்டு பீதி ஏற்படுத்தியிருந்தனர் சில உடன் பிறப்புகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications