Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக எம்எல்ஏவை தாக்கி கைதாகி இறந்தவர்.. வசந்தமணி உடலை வாங்க குடும்பத்தினர் சம்மதம்

எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் வசந்தமணியின் உடலை பெற்றுக்கொள்வதாக அவரது மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை கைது செய்யும் வரை வசந்தமணியின் உடலை வாங்க மாட்டேன் என்று கூறி வந்த அவரது மனைவி சுனிதா தற்போது பல நிர்பந்தங்களால் உடலை பெற ஒப்புதல் அளித்துள்ளார்.

போளூர் அரசிங் தெருவை சேர்ந்தவர் வசந்தமணி என்கிற மணிகண்டன் என்ற மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளி. கலசபாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்து வந்துள்ளார். அவருக்கு எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் பணம் தரவேண்டி இருந்தது. பணத்தை கேட்டபோது அவருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21ம் தேதி இரவு வசந்தமணி பணத்தை கேட்பதற்காக போளூர் வசந்தம் நகரில் உள்ள பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்றார்.

Vasanthmani family accepts to collect his body

அங்கு எம்.எல்.ஏ. இல்லாததால் வசந்தமணி ஆத்திரமடைந்தார். இதனைத்தொடர்ந்து போளூரில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சென்றதை அறிந்து அங்கு சென்ற வசந்தமணி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு திடுக்கிட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் வசந்தமணியை தாக்கினர்.

இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.வை தாக்கியதாக வசந்தமணியை போலீசார் கைது செய்து அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

கடந்த 23ம் தேதி இரவு வசந்தமணிக்கு சிறுநீருடன் ரத்தம் கலந்து சென்றது. இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு மூளையில் ரத்தம் கட்டியுள்ளதாக கூறி அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வசந்த மணி பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி வசந்தமணியின் உறவினர்களும், அவரது மனைவியும் போர்க்கொடி உயர்த்தினர். இதனைத்தொடர்ந்து வசந்த்மணி மரணம் குறித்து இன்று வேலூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் விசாரணை மேற்கொண்டார்.

எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வசந்தமணியின் உடலை வாங்கப்போவதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளதால், உடல் பிரேத பரிசோதனை செய்யாப்படாமல், மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் உடலை மனைவி வாங்கிக்கொள்வதாக ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வசந்தமணியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+