டெங்குவைக் கட்டுப்பாடுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக்.11-ல் போராட்டம்: திருமாவளவன்
தமிழகத்தில் பரவி வரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக்டோபர் 11-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
சென்னை: தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக்டோபர் 11-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
டெங்குக் காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் தினம் தினம் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மாவட்ட தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெங்குக் காய்ச்சலுக்கு தினம் சராசரியாக பத்து பேர் பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்குக் காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தமிழக அரசு டெங்குக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது மட்டுமில்லாமல் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி உண்மையை மூடி மறைத்து வருகிறது.
தமிழக அரசின் இந்த போக்கைக் கண்டித்தும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்குவுக்கும் சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும் வரும் புதன்கிழமை, அக்டோபர் 11ஆம் தேதி, மாவட்ட தலைநகர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications