தொல். திருமாவளவனின் சொத்து மதிப்பு ரூ. 68.22 லட்சம்...ரூ.6.63 லட்சம் கடன்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவருக்கு ரூ. 68.22 லட்சம் சொத்து உள்ளதாகவும், ரூ. 6.63 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இவர், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் ரூ. 39.78 லட்சம் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர ரூ. 25.77 லட்சம் மதிப்புள்ள பூர்விக சொத்தும் திருமாவளவனுக்கு உள்ளது.
மேலும் 2014-15 நிதி ஆண்டில் ரூ. 12.06 லட்சம் வருமானம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர வங்கியில் ரூ. 6.63 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சொந்தமாக கார் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள திருமாவளவன், தங்க, வெள்ளி நகைகள் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
திருமாவளவன் சொத்து விவரம்:
அசையும் சொத்து: 39 லட்சத்து, 78 ஆயிரத்து, 940 ரூபாய். ஒரு சபாரி கார் உள்ளது.
அசையா சொத்து: 25 லட்சத்து, 77 ஆயிரத்து, 800 ரூபாய் மதிப்புள்ள, அங்கனுார் கிராமத்தில் உள்ள வீடு மற்றும் நிலம்.
வங்கி கணக்கு: ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் இந்தியன் வங்கிகளில், ஆறு அக்கவுன்ட் மூலம், 2 லட்சத்து, 67 ஆயிரத்து, 300 ரூபாய்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications