கேவலமான ஜாதி.. மாணவன் புத்தகத்தில் ஜாதி பெயரை எழுதிய திருப்பத்தூர் ஆசிரியர்.. பாயுமா நடவடிக்கை?
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சுமோட்டூர் பகுதியில் மாணவனின் புத்தகத்தல் ஜாதி பெயரை எழுதி வைத்த ஆசிரியருக்கு எதிராக விசிகவினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சுமோட்டூரில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் பெயர் ரித்விக். இவர் குனிச்சுமோட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த பள்ளியில் ஆசிரியராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி பள்ளியில் ஆசிரியர் விஜயகுமார், மாணவர் ரித்விக்கின் வகுப்பிற்கு ஆங்கில பாடம் நடத்தினார்.
அப்போது இசை கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார். இந்த சமயத்தில் இசை கருவிகளை வாசிப்பவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்றும், ஜாதியை குறிப்பிட்டு பாடம் நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு தாழ்த்தப்பட்ட ஜாதி, கேவலமான ஜாதி என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர மாணவனின் புத்தகத்திலும் சாதியின் பெயரை ஆசிரியர் விஜயகுமார் எழுதி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி அறிந்த மாணவன் ரித்விக்கின் பெற்றோர்கள் கடந்த 19 ம்தேதி பள்ளிக்கு சென்றனர். ரித்விக்கின் புத்தகத்தில் ஜாதி பெயர் எழுதியது, ஜாதியை குறிப்பிட்டு பாடம் நடத்தியது பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தனர்.

இதையடுத்து இன்று திருப்பத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சென்றனர். பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் விஜயகுமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினர். இதனால் பள்ளியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி, திருப்பத்தூர் வட்டாட்சியர், போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications