திமுகவில் 30 -40 வருஷமா ஒரே ஆள் தான் மாவட்டச் செயலாளர்! விசிகவில் அப்படியில்லை! - திருமாவளவன்
செங்கல்பட்டு: திமுகவில் 30, 40 வருஷமா ஒரே ஆள் தான் மாவட்டச் செயலாளராக இருப்பார் என்றும் அங்கே யாரும் இது பற்றி கேள்வி எழுப்ப முடியாது எனவும் பேசியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற விசிக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

அதிமுகவிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான் என்றும் தலைமை போடும் மாவட்டச் செயலாளருக்கு எதிராக அங்கே கேள்வி எழுப்ப முடியாது எனவும் கூறியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மட்டும் தான் மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
அண்மையில் வெளியான விசிக மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை தொடர்ந்து, பல இடங்களிலும் பதவி எதிர்பார்த்து கிடைக்காதவர்கள் பிரச்சனைகள் செய்து வந்தனர். குறிப்பாக கள்ளக்குறிச்சியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட விசிக பெண் மாவட்டச் செயலாளர் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நிகழ்வும் நடந்தது.

இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர் பதவி எதிர்பார்த்து கிடைக்காதவர்களை கூல் செய்யும் வகையில் திருமாவளவன் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் 4,140 பேர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள் என்றும் இவ்வளவு பேருக்கும் எப்படி தன்னால் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க முடியும் எனவும் நிலைமையை விளக்கிக் கூறியுள்ளார்.
நிர்வாகிகள் நியமனத்தில் பதவி கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும் என்றும் உரிய தருணத்தில் வாய்ப்பு தேடி வரும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications