ஐ.நா.சபையில் ராஜபக்சே பேச அனுமதி: தொல். திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச அனுமதி அளித்ததைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐ.நா.சபையில் வருகிற 25-ந்தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக திருமாவளவன் முழக்கங்களை எழுப்பினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறும் நிலையில் ஐ.நா. மன்றத்தில் அவரை பேச அனுமதி கொடுத்திருப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.
இந்திய அரசு இதில் தலையிட்டு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சர்வதேச நாடுகள் பங்கேற்கும் ஐ.நா.மன்றத்தில் இனப்படுகொலை செய்த குற்றவாளி ராஜபக்சே பேசுவதை அனுமதிக்க முடியாது.

இதை கண்டித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதே போல் நாளை பல்வேறு அமைப்புகள் சார்பாக நடத்தப்படும் பேரணிக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
25-ந்தேதி கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனை வரவேற்கிறோம். நாங்கள் இன்று முதலே கறுப்பு சட்டை அணிந்துள்ளோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications