திருமா போட்டியிடும் தொகுதி இன்று அறிவிக்கப்படவில்லை... !
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இருப்பினும் அதில் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படவில்லை.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்களில் திமுக - அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதனால், 25 ஆண்டுகளாகியும் கட்சியை வளர்க்க இயலாமல் மற்றவர்களைச் சார்ந்தேயிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், இம்முறை மாற்றத்தை வேண்டி, கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை எழுப்பினார் திருமா. பின்னர் அதன் தொடர்ச்சியாக மக்கள் நலக்கூட்டணி உருவானது. அந்தக் கூட்டணியில் தேமுதிகவும், தமாகாவும் சேர்ந்ததன் மூலம் மேலும், அக்கூட்டணி வலுப்பெற்றுள்ளதாக அதன் தலைவர்கள் கருதுகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவு தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதிப் பங்கீட்டின் போது, முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை கேட்டுப் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று மாலை வாக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை.
11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திருமாவளவன் இன்று முதல் கட்டமாக அறிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications