ஸ்ரீரங்கத்தில் ஒரு அமைச்சர் கூட பிரசாரம் செய்யக் கூடாது... திருமாவளவன்
வேலூர்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது பற்றி 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததை அடுத்து அவரது முதல்வர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி அதாவது நாளை துவங்குகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 30ம் தேதி ஆகும்.

இந்நிலையில் இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு திமுகவுக்கு அளிக்கப்படுமா என்று ஆர்காடு வந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில்,
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது பற்றி 2 நாட்களில் முடிவு செய்யப்படும். ஸ்ரீரங்கத்தில் அமைச்சர்கள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. அவர்களை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதித்தால் அவர்கள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications