ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. விஜய் அமைச்சரவையில் இணையும் விசிக? அதுவும் திருமா அமைச்சராகிறார்? பின்னணி
சென்னை: திமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜய் அமைச்சரவையில் இணைய திருமாவுக்கு தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. தவெக தரப்பில் இருந்து மட்டுமன்றி விசிக தரப்பில் இருந்தும் திருமாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
தவெக கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக தலைமையிலான மத சாற்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தான் இருந்து வருகிறார். இடதுசாரிகள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்பவே, விசிகவின் நிலைப்பாடும் இருக்கும் என்று அடிக்கடி சொல்லி வருகிறார் அவர். அதனடிப்படையில் தான் தவெக அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவளித்ததாகவும் அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார் திருமா.
அந்த வகையில் முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் விசிக இடம் பெறாது என்பதே இதுவரை திருமா சொல்லி வந்த அழுத்தமான வார்த்தைகள். ஆனால், திமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜய் அமைச்சரவையில் இணைய திருமாவுக்கு தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.

விசிகவில் நீடிக்கும் குழப்பம்
விசிக கட்சிக்கு தற்போது வன்னியரசு , ஜோதிமணி என 2 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதில் வன்னியரசு விசிகவின் சீனியர். தற்போதைய சூழலை பயன்படுத்தி அமைச்சராக வேண்டும் என்கிற விருப்பம் வன்னியரசுக்கு அதிகம் இருப்பதாக விசிக வட்டாரங்களில் பரவி வருகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனும் விசிகவின் முழக்கத்தில், வாய்ப்பு அமைந்தால் விசிகவின் 40 ஆண்டுகால அரசியலில், அமைச்சராக அதிகாரத்தில் அமரும் முதல் நபர் வன்னியரசு என்கிற பெருமை அவர்க்கு கிடைக்கும் என்று விசிக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் திருமாவுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது.
ஆனால், விசிகவிலுள்ள முக்கிய நிர்வாகிகள் திருமாவிடம் விவாதிக்கும் போது பல தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர். குறிப்பாக, ''இடதுசாரிகள் எடுக்கும் நிலைப்பாட்டை யொட்டியே விசிகவின் நிலைபாடும் இருக்கும் என சொல்லி வருகிறீர்கள். தற்போது சிலரின் அழுத்தங்களுக்கு யோசித்து தவெக அமைச்சரவையில் விசிக இடம்பிடித்தால், அது விமர்சனங்களுக்கு உள்ளாகும். உங்களின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும். அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியிலிருந்து நாம் வெளியேறிவிட்டதாக அர்த்தமாகும். திமுகவை விட்டு பிரிந்தால், விசிகவுக்கு எதிராக திமுகவின் விமர்சனங்களும் கடுமையாகலாம். அதை சமாளிக்க வேண்டும்.
இவ்வளவு ரிஸ்க் இதில் இருக்கிறது. ஒருவேளை ரிஸ்கை சமாளிக்கலாம் என முடிவெடுத்தால், தவெகவில் நீங்கள் அமைச்சராகுங்கள். திருச்சி கிழக்கு தொகுதியை விசிகவுக்கு விட்டுக் கொடுக்க விஜய்யிடம் பேசுங்கள். அதற்கு ஓ.கே. எனில் நீங்கள் அமைச்சராக எந்த ரிஸ்கையும் எடுக்க கட்சி தயாராக இருக்கும். அதனால் இந்த கோணத்தில் நீங்கள் ஆலோசிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி வருகிறார்களாம்.
அதாவது நீங்கள் அமைச்சர் ஆகும் பட்சத்தில் அதை யாராலும் எதிர்க்க முடியாது. உங்களை எதிர்த்தால் அது தவறான கோணத்தில் முடியும். இதனால் நீங்கள் போட்டியிட்டு அமைச்சர் ஆகுங்கள். அதுவே சரியாக இருக்கும். இப்போது இருக்கும் திமுக உடனான இணக்கம் இனி எதிர்காலத்திலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் தவெக பக்கம் சென்றாலும் தவறவில்லை என்று வலியுறுத்தி வருகிறார்களாம்.
அதனால் தவெக அரசில் விசிக பங்கு பெறுமா? அல்லது இப்போதைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நீடிக்குமா? என்கிற விவாதங்கள் விசிகவில் அலை அடிக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்
-
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்?












Click it and Unblock the Notifications