ம.தி.மு.க, இடதுசாரிகளுடனான கூட்டணியிலேயே நீடிப்போம்: திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு
திருச்சி: தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. மற்றும் இடதுசாரிகளுடனான கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் நீடிக்கும் என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
திருச்சியில் மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரித் தலைவர்கள் முத்தரசன், டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்கள் மீது நடைபெறும் தாக்குதலை கண்டித்தும், பூரண மது விலக்கு கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வரும் நவம்பர் 2-ந் தேதி வைகோ, இந்த மக்கள் நல கூட்டு இயக்கம் தேர்தலில் கூட்டணி அமைப்பாக செயல்படும் என்பதை அறிவிப்பார். இதன் மூலம் பத்திரிகைகள் ஏற்படுத்தி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்.
இந்த நான்கு கட்சிகளும் தனித்தனியே அவர்களின் உயர்மட்ட குழுக்களிலே ஆலோசனை செய்து அவர்கள் சொன்ன ஆலோசனைகள் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவானது. இது தான் தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசின வை.கோ, நான் நவம்பர் 2-ந் அறிவிப்பதாக இருந்ததை என் இளவல் திருமா இப்போதே அறிவித்துவிட்டார். தமிழகத்தின் மத்திய பகுதியில் இன்று திருமாவளவன் அறிவித்ததை அத்தனை வார்த்தைகளையும் நான் வழி மொழிகிறேன். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. அது முடிந்து வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்று இனி அனைத்துக்குமான கூட்டணி என்றார்.
இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன், தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடர்ந்து பல வன்முறைகளும், அடக்கு முறையும் நீடித்து வருகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications