‘கத்தரி’ மயில், ‘கேரட்’ மரம், ‘தர்பூஸ்’ கப்பல்...காய்கறி விழிப்புணர்வு போட்டியில் கலக்கிய மாணவர்கள்
சென்னை: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு காய்கறிகள் சாப்பிடும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
எனவே, காய்கறிகள் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து சென்னை சேத்துபட்டு எம்சிசி பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

இயற்கைக் காட்சிகள்...
ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அன்னை தெரசா, இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை தத்ரூபமாக வரைந்திருந்தனர்.

பரிசு...
அதில் சிறப்பான கருத்தாழம் மிக்க ஓவியம் பரிசிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மண்பானை ஓவியம்...
அதேபோல், பானைகளில் ஓவியம் வரையும் போட்டியும் நடத்தப்பட்டது. அதிலும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

விதவிதமாக...
மண்பானைகளில் விதவிதமான கண்ணைக் கவரும் வகைகளில் ஓவியங்களை அவர்கள் தீட்டினார்கள்.

காய்கறிகளில் உருவங்கள்...
காய்கறிகளில் விதவிதமான உருவங்களை உருவாக்கும் போட்டியும் நடத்தப்பட்டது.

உருளைக்கிழங்கு ஹெலிகாப்டர்...
கேரட் மற்றும் உருளைக் கிழங்கு கொண்டு மாணவர்கள் உருவாக்கிய குட்டி ஹெலிகாப்டர் இது.

கத்தரி மயில்...
கத்தரிக்காய்க்கு கால் முளைக்க வைத்து மயிலாக உருவம் கொடுத்திருக்கிறார் இந்த மாணவர்.

காய்கறிக் கப்பல்...
கத்திக் கப்பல் போல், இவர் காய்கறிக் கப்பல் உருவாக்கியிருக்கிறார் இந்த மாணவி. தர்பூசணி,சாத்துக்குடித் தோல் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களைக் கொண்டு இவர் இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளார்.

தோட்டம்...
கேரட், உருளைக் கிழங்கு, குடை மிளகாய் கொண்டு இம்மாணவிகள் தென்னை மரம் போன்ற தோற்றத்தையும், சிறு தோட்டத்தையும் உருவாக்கியுள்ளனர்.

சின்ன உயிரியல் பூங்கா...
இங்கே கத்தரிக்காயைக் கொண்டு பென்குவின், பாகற்காயைக் கொண்டு முதலை என காய்கறிகளைக் கொண்டு சின்ன உயிரியல் பூங்காவையே உருவாக்கியுள்ளனர்,
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications