மதிமுகவிலிருந்து விலகிய வேளச்சேரி மணிமாறன்.. இன்று முதல் திமுகவில்!
சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய வேளச்சேரி மணிமாறன் இன்று முறைப்படி திமுகவில் இணைந்து கொண்டார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இவர் மதிமுகவை விட்டு விலகினார். அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில் இன்று திமுகவில் வந்து சேர்ந்து கொண்டார்.
மதிமுகவில் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறன். ஆனால் வைகோவுக்கு மிக மிக நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன்.

"மதிமுகவின் பேங்க்" என்று கூட செல்லமாக மணிமாறனை சொல்வார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கானவர், செலவு செய்ய அஞ்சாதவர். மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு, எடைக்கு எடை வெள்ளி கட்டி, தங்க பேனா, தங்க வாள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி, அவரது தீவிர ஆதரவு மாவட்ட செயலராக வலம் வந்தவர் வேளச்சேரி மணிமாறன்.
மல்லை சத்யா வைகோவின் வலது கரம் என்றால் மணிமாறன் இடது கரமாக திகழ்ந்தவர். ஆனால் மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதை மணிமாறன் விரும்பவில்லை. இதனால் மதிமுகவில் தனது செயல்பாடுகளை அவர் சுருக்கிக் கொண்டார். வேளச்சேரி தொகுதியில் மணிமாறனை போட்டியிடுமாறு வைகோ கூறியபோதும் அதை ஏற்கவில்லை, ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் மே 15ம் தேதி கட்சியை விட்டு விலகுவதாக வைகோவுக்கு கடிதம் அனுப்பி விலகினார் மணிமாறன். அவர் திமுகவில் சேரப் போவதாக கூறப்பட்டது. ஆனால் சற்று தாமதமாக இன்றுதான் அவர் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications