வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கியது.. பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விரைவில் விடுதலை?
வேலூர்: நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரின் சிறை நடவடிக்கைகளும் நன்றாக இருப்பதாக வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடபாக மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கும் மத்திய அரசு தற்போது, 'இதை நாங்கள் பரிசீலிப்போம்' என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளது.

இது நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அதிமுக நாடகமாடுவதாகவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரும் எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என்றும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் வெள்ளிக்கிழயன்று தகவல் வெளியானது.
மேலும், நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இது தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் இருந்து, நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பான சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் உள்ளிட்டவர்களின் சிறை நடவடிக்கைகள் மிகவும் நன்றாக உள்ளது என்று தமிழக அரசுக்கு சிறை நிர்வாகம் நற்சான்று கொடுத்து கடிதம் அனுப்பி உள்ளது.
7 பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 பிரின் கீழ் விடுதலை செய்ய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால், 161-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அதற்கான உதாரணம் தான் இந்த சிறைத்துறையின் நற்சான்று நடவடிக்கை என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலும், அரசமைப்புச் சட்டம் 161- ஐ பயன்படுத்தி விடுதலை செய்யும் நடவடிக்கையை எந்தவகையிலும் பாதிக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால் நளினி, பேரறிவாளன் ஆகியோர் ஒரு மாதம் பரோல் கேட்டபோது, இதே சிறை நிர்வாகம் அவர்களுக்கு நற்சான்று வழங்கவில்லை. ஆனால் தற்போது வழங்கி தமிழக அரசிடம் அதை சமர்பித்துள்ளது. தற்போது நற்சான்று அளிக்கப்பட்டு விட்டதால், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரறிவாளன் நம்பிக்கை
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், 7 விடுதலை தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி கருத்து கூறியுள்ளார். வழக்கறிஞர்கள் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், ''எங்களுக்கு வரும் செய்திகள் அனைத்தும் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. எங்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது. எங்களை விடுதலை செய்தால் தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications