Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர்: இளம்பெண் கழுத்தறுத்து கொலை - தந்தை பிணமாக கிணற்றில் மீட்பு

வேலூர் அருகே இளம்பெண் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை வீட்டில் அருகே உள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வேலூர்: இளம்பெண் கழுத்தறுத்து கொலை - தந்தை பிணமாக கிணற்றில் மீட்பு- வீடியோ

    வேலூர்: வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தில் தந்தையும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரப்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்தவர் நசீர்,50. பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மனைவி தமீம் தம்பதிக்கு 3 மகள்கள் ஒருவர் நோய் வாய்பட்டு இறந்துவிட்டார்.

    நசீரின் மனைவி தமீம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 2வது மகள் சில ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். மூத்த மகள் யாஸ்மின் திருமணமாகவில்லை தந்தையுடன் யாஸ்மின் வசித்து வந்தார்.

    நசீர் - யாஸ்மின்

    நசீர் - யாஸ்மின்

    நசீருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது தலையில் ஆபரேசன் செய்து கொண்டார். அதிலிருந்து அவரால் சரியாக பேச முடியவில்லை. காலில் முறிவு ஏற்பட்டு சிரமப்பட்டு நடந்தார்.

    இதனால் நசீர் மனமுடைந்து காணப்பட்டார். யாஸ்மினுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தார். இது சம்பந்தமாக தந்தை-மகள் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நசீர் உடல் மீட்பு

    நசீர் உடல் மீட்பு

    நசீர் தனது வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றில் இன்று காலை பிணமாக மிதந்தார்.

    இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் இதுபற்றி அவரது மகளிடம் கூற வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கதவு பூட்டப்படாமல் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தனர்.

    கொலையான யாஷ்மின்

    கொலையான யாஷ்மின்

    அங்கு யாஸ்மின் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார் வீடு முழுவதும் ரத்தமாக காணப்பட்டது. தந்தையின் சடலத்தையும் யாஷ்மின் இருந்த நிலையையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ரத்தினகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    நசீம் சடலம் மீட்பு

    நசீம் சடலம் மீட்பு

    ராணிப்பேட்டை டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கபட்டனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த நசீர் உடலை கட்டிலில் கயிறு கட்டி மீட்டனர். மீட்கபட்ட உடலை கிண்ற்றில் அருகே வைத்தனர்.

    கிணற்றை சுற்றி வந்த மோப்பநாய்

    கிணற்றை சுற்றி வந்த மோப்பநாய்

    வேலூரில் இருந்து மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாயானது யாஸ்மின் கிடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள கிணற்றுக்கு ஓடி சுற்றி சுற்றி வந்தது. இறுதியாக நசீர் உடலருகே சென்று படுத்து கொண்டது.

    தந்தை மகள் தகராறு

    தந்தை மகள் தகராறு

    இதன் மூலம் யாஸ்மீனை நசீர் கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தந்தை மகளிடையே ஏறபட்ட தகராறில் நசீர் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்கு பதட்டம் நிலவியதால் 25க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+