ஆம் ஆத்மி கட்சியை அதிகம் தெரிந்த வேலூர் எம்.பி தொகுதி வாக்காளர்கள்- தந்தி டிவி கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் பிரதமர் ஆவார் என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளில் தீவிரமாக உள்ளன.

Kejriwal

இந்நிலையில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.

தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

இன்றைக்கு வேலூர் தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் விபரங்களைப் பார்ப்போம்.

(தந்தி டிவி ஒவ்வொரு தொகுதியிலும் கருத்துக்கணிப்பை முடித்தவுடன் அதன் விவரங்களை நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து அளிப்போம்.)

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,

ஆமாம் - 44%, இல்லை - 56%

மீண்டும் வாக்களிப்பீர்களா?

தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,

ஆமாம் - 43% இல்லை - 57%

அடுத்த பிரதமர்?

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்

நரேந்திர மோடி - 52%

ராகுல்காந்தி - 42%

ஜெயலலிதா - 6%

இந்தியாவின் மீட்பர் யார்?

தற்போதைய சிக்கல்களில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் திறன் யாருக்கு அதிகம் உள்ளது என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்

நரேந்திர மோடி - 55%

ராகுல்காந்தி 42%

ஜெயலலிதா 3%

மாநில கட்சியா தேசிய கட்சியா யாருக்கு உங்கள் வாக்கு?

மாநில கட்சி 43% தேசிய கட்சி 57%

தேசிய கட்சியில் யாருக்கு வாக்கு?

தேசிய கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,

பாஜக - 59%, காங்கிரஸ் -41%

மாநிலக் கட்சி

மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு?

அதிமுக - 45%, திமுக - 42 %, தேமுதிக -3 %, மதிமுக - 4%, பாமக- 6%

ஜெயலலிதா அடுத்த பிரதமராக ஆதரவு

ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு மக்கள் தந்துள்ள பதில்,

ஆமாம்- 16%, இல்லை - 37%, வாய்ப்பு இருக்கலாம் - 47%

ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?

ஆம் ஆத்மி கட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு மக்கள் பதில்,

தெரியும்- 84%, தெரியாது - 16%

ஆம் ஆத்மிக்கு வாக்கு

ஆம் ஆத்மி கட்சியை தெரிந்தவர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பீர்களா?

ஆமாம் - 40%, இல்லை - 60%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+