அப்பப்ப தினகரன் காமெடி செய்வார்.. அமைச்சர் வேலுமணி பொளேர் பொளேர்!
கோவை: டிடிவி தினகரன் அவ்வப்போது காமெடி செய்வார். இப்போதும் அதையேதான் செய்து வருகிறார். அவரை கட்சியை விட்டுப் போகச் சொன்னதே நானும் அமைச்சர் தங்கமணியும்தான் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:

மழை வருவதற்கு முன்னரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குளங்கள் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கினால் அகற்ற மோட்டார்கள் தேவையான அளவு இருக்கின்றது. தேவைப்படும் இடங்களில் மோட்டார்கள் வாடகைக்கு எடுக்கப்படும்.
மரம் அறுக்கும் இயந்திரம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை எப்படி வந்தாலும் சமாளிக்கும் நிலை இருக்கின்றது. பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு போன்றவை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[ தங்கமணி என்ன அதிமுகவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவா.. தினகரன் கிண்டல்! ]
டிடிவி தினகரன் அவ்வப்போது நிறைய காமெடி செய்வார். டிடிவி தினகரனை கட்சியில் இருந்து விலக சொன்னதே நானும் தங்கமணியும்தான். திருப்பரங்குன்றம் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால் தினகரன் இப்படி பேசிகின்றார். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் அண்ணன் தம்பி போல் இருக்கின்றனர்.
10 வருடங்கள் கட்சியில் டிடிவி தினகரன் இல்லை. அவரை ஜெயலலிதா விலக்கி வைத்திருந்தார். டிடிவி தினகரன் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. டிடிவி தினகரனுக்கு ஓ.பி.எஸ் முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை.
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிய குற்றசாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, இது சம்மந்தப்பட்ட துறையில் கேட்கவேண்டிய கேள்வி என தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications