Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கமணி என்ன அதிமுகவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவா.. தினகரன் கிண்டல்!

அமைச்சர் தங்கமணி என்ன அதிமுகவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவா என டிடிவி தினகரன் கிண்டலடித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஓபிஎஸ் பற்றி டிடிவி தினகரன் பேட்டி

    பெங்களூரூ: அமைச்சர் தங்கமணி என்ன அதிமுகவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவா என டிடிவி தினகரன் கிண்டலடித்துள்ளார்.

    அதிமுகவினரும் அமமுகவினரும் மாறி மாறி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி மீண்டும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தன்னை ரகசியமாக சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியதற்கு அமைச்சர் தங்கமணி நேற்று பதிலடி கொடுத்திருந்தார்.

    அதாவது, நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவுடன் அமமுகவை இணைத்து கொள்ளலாம் என தினகரன் தூது விட்டார். இதற்கான ஆதாரம் உள்ளது. நேரம் வரும் போது அதனை வெளியிடுவேன். தினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என சாடியிருந்தார் தங்கமணி.

    செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பு

    இந்நிலையில் அமமுக வின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தங்கமணியிடம் தூது

    தங்கமணியிடம் தூது

    அப்போது நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகியோர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அமைச்சர் தங்கமணியிடம் தூது விடுத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    டாஸ்மாக் மணி

    டாஸ்மாக் மணி

    அதற்கு பதிலளித்த தினகரன், என்ன ஆதாரம் இருக்கிறதோ அதனை தங்கமணி தாராளமாக வெளியிடலாம் என்றார். மேலும் அமைச்சர் தங்கமணியை டாஸ்மாக் மணி என்றும் தங்கமணி என்ன அதிமுகவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவா என்றும் கிண்டலடித்தார் தினகரன்.

    வருத்தம் தெரிவித்தவர்

    வருத்தம் தெரிவித்தவர்

    கூவத்தூரில் காம்பவுன்ட் ஏறி குதித்த தங்கமணியை இழுத்து வைத்தது நான்தான். யாரோ ஏதோ பேசுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை. சட்டசபையில் என்னை வா, போ என பேசிவிட்டு வருத்தம் தெரிவித்தவர் தங்கமணி.

    பழனிச்சாமியிடம் பேச மாட்டேனா?

    பழனிச்சாமியிடம் பேச மாட்டேனா?

    தங்கமணியிடம் பேசுவதற்கு நான் நேரடியாக பழனிச்சாமியிடமே பேச மாட்டேனா? தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது ஏன்? இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+