மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கு அனுமதி... கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவில் பேரிடி- வேல்முருகன்
சென்னை: மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது, கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவில் விழுந்த பேரிடி என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2013-ம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம்தான் பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை விதித்திருந்தது.

ஆனால் மக்கள் விரோத மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இந்த முடிவால் இந்த நாட்டின் கோடிக்கணக்கான கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவபடிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது.
ஐஐடி போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி கிராமப்புற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை நசுக்கியது. இப்போது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் மருத்துவ படிப்புகளுக்கான உரிமையும் பறிபோய்விட்டது.
அண்மைக்காலமாக உச்சநீதிமன்றம் அளித்து வரும் தீர்ப்புகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததாக இருப்பது தொடர் கதையாகி வருகிறது. கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு அனுமதி, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை போன்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரிசையில் தற்போது மருத்துவபொதுநுழைவுத் தேர்வுக்கு அனுமதி என்கிற பேரிடியும் விழுந்துள்ளது. ஆகையால் பொதுமருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அனுமதி அளிக்கும் இந்த தீர்ப்புக்கு எதிராக உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications