தமிழக ஆளுநருடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திடீர் ஆலோசனை
சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் ஜெயலலிதா 19 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் சென்னைக்கு வருகை தந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். புதுவை முதல்வர் நாராயணசாமி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
அதேபோல் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே இன்று திடீரென ஆளுநர் வித்யாசாகர் ராவை வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்கால முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை வெங்கையா நாயுடு சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications