காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.. கமல் கருத்து!
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கான நீரை 177.25 டிஎம்சியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்துக்கான நீரில் கையை வைத்துள்ளது சுப்ரீம்கோர்ட்.
தமிழகத்துக்கான நீர் குறைக்கப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது
இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என அவர் கூறினார்.

நாம் குரங்காக இருந்தபோதே
ஆனால் காவிரிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியது ஆறுதல் அளிக்கிறது என்றும் அவர் கூறினார். நாம் குரங்காக இருந்தபோதில் இருந்தே காவிரி ஓடுகிறது, அதனை உரிமை கொண்டாட முடியாது என தான் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

எப்படி பயன்படுத்த போகிறோம்
தமிழகத்துக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள போதும் கிடைக்கும் நீரை தமிழக அரசு பத்திரப்படுத்த வேண்டும் என்றும் அதனை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்தார்.

ஓட்டு விளையாட்டு
தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தம் தான் என்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அழுத்தமாக உள்ளது வரவேற்கத்தக்கது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். தீர்ப்பை வைத்து அரசியல் கட்சிகள் ஓட்டு விளையாட்டு விளையாட கூடாது என்றும் கமல் தெரிவித்தார்.

எரியும் வீட்டில் பீடி பற்றவைக்கக்கூடாது
வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என அரசியல் கட்சிகள் சச்சரவுகளை ஏற்படுத்தக்கூடாது என்றும் கமல் தெரிவித்தார். பற்றி எரியும் வீட்டில் பீடி பற்ற வைக்கிறேன் என அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையாடுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் ஒற்றுமை
இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் அப்போது தான் நதிகளை இணைக்க முடியும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். நிலத்தடி நீரை அரசு பாதுகாக்கவில்லை எனில் நாம் பாதுகாப்போம் என்றும் அவர் கூறினார்.

தேசியம் மறந்து பேசுகிறார்கள்
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது உதவாது என்ற அவர் தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது என்றார். வாக்கு வேட்டையில் காவிரி சர்ச்சையை தூண்டிவிட்டு தேசியம் மறந்து பேசுகிறார்கள் என்றும் கமல் குற்றம்சாட்டினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications