"பி.எட். கல்லூரி ஆசிரியர்கள் உருப்படி இல்லாதவர்கள்"- துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை
சென்னை: தமிழகத்தில் உள்ள பி.எட் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உருப்படி இல்லாதவர்கள் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி கூறியுள்ள கருத்து ஆசிரியர்களிடையே சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பி.எட். கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் கல்வியியலில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் விதிமுறைப்படி வரும் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக்கான காலம் இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் இயங்கும் 689 பி.எட் கல்லூரி நிர்வாகங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இடவசதி, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள நிலையில், ஓராண்டு படிப்பே போதும் என கல்வியியல் கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக தங்கசாமி பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள பிஎட். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரும் உருப்படி இல்லாதவர்கள் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தரே இவ்வாறு ஆசிரியர்களை விமர்சித்துள்ளது பி.எட். கல்லூரி ஆசிரியர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications