கொட்டும் மழையில்.. ஆனந்த குளியல்போடும் யானை.. ரசிக்க வைக்கும் 'க்யூட்' வீடியோ..!
தென்காசி: தென்காசியில் கொட்டும் மழையில் யானை ஒன்று ஆனந்தக் குளியல் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சங்கரன்கோவில் கோமதியம்மாள் கோவிலில் ஒரு யானை உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

அந்த வகையில் கோமதியம்மாள் கோவிலில் நேற்று கனமழை பெய்து கொண்டிருந்தது. கோயில் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தபோது அந்த மழையில் ஆனந்தக் குளியல் போட்டது.
தனது தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து தலையில் வாரி கொட்டியது. தலையை ஆட்டியபடி தண்ணீரை வாரி வாரி ஊற்றி உடலை நனைத்துக் கொண்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு பேக்கிரவுண்ட் பாடலாக ஆதி படத்தில் வரும் என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே எனும் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பாடலுக்கும் யானையின் ஆடலுக்கும் பார்க்கவே படு சிங்க்காகி இருந்தது. யானையின் செயலை கண்டு பலர் ரசித்து வருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications