என் உயிருக்கு எதுவும் ஆகாதே...சார் நான் படிக்கணும்... வெட்டுப்பட்ட கல்லூரி மாணவர் உருக்கம்- வீடியோ
Recommended Video

திருவள்ளூர் : திருநின்றவூரில் மாணவர் ஒருவர் முன்விரோதத்தின் காரணமாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், பேசும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் கல்லூரிக்கு தேர்வெழுந்த வந்த மாணவர் ஒருவரை வழிமறித்து மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சென்னை ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். இவர் தலைமைச் செயலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஞ்சித் திருநின்றவூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் கடந்த வாரம் தகறாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இன்று கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவர் ரஞ்சித்தை பீர் பாட்டிலால் தாக்கி, பின்னர் கத்தியால் குத்தினர்.
இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சித்தை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர்.
இதனிடையே கல்லூரி மாணவன் ரஞ்சித்தை கத்தியால் வெட்டிய சந்தோஷ், ஆகாஷ், யோகேஷ், விக்னேஷ் ஆகிய நான்கு பேரையும் திருநின்றவூர் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மாணவர் ரஞ்சித் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வாக்குமூலம் அளிக்கும் ரஞ்சித் மருத்துவரிடம், 'உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே சார்.. நான் படிக்கணும்..' என்ன எப்படியாவது காப்பாத்திடுங்க என்று பேசுவது நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications