"கள்ளத் தொடர்பு கார்த்திக்"... கொந்தளித்த மக்கள் மாநாட்டுக் கட்சி... மீண்டும் உடைந்தது "விடியல்"!
சென்னை: விடியல் கூட்டணி என்று பெயர் வைத்ததற்குப் பதில் பேசாமல் விடியாத கூட்டணி என்று வைத்திருக்கலாம். நடிகர் கார்த்திக் திடீரென உருவாக்கிய இந்த திடீர் கூட்டணி இப்போது 2வது முறையாக உடைந்து கழன்றிருக்கிறது.
யாராலும் சீந்தப்படாமல் போன நிலையில் திடீரென ஒரு நாள் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக், நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல என்று கூறி ஒரு கூட்டணியை அறிவித்தார். அதன் பெயர்தான் விடியல் கூட்டணி.
நாடாளும் மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி, மக்கள் மாநாடு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து இந்த விடியல் கூட்டணியாக மலர்ந்தது.

சிங்கம் கூட்டணிக்கு ஜம்ப்
ஆனால் கூட்டணி உருவானதோடு சரி அதன் பிறகு கார்த்திக்கைக் காணோம். இதனால் வெறுப்பாகிப் போன மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கூட்டணியிலிருந்து விலகி, பார்வர்ட் பிளாக் கட்சியின் கதிரவன் உருவாக்கிய சிங்கம் கூட்டணியில் போய்ச் சேர்ந்து விட்டது.

கவலையே படலையே
இருப்பினும் இந்த பிளவுக்காக கார்த்திக் கவலையே படவில்லை. மாறாக அவர் பாட்டுக்கு வழக்கம் போல அமைதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று இன்னொரு முறை உடைந்துள்ளது விடியல் கூட்டணி.

மக்கள் மாநாடும் வெளியேறியது
மக்கள் மாநாடு கட்சி இன்று விடியலை விட்டு விலகி வந்து விட்டது அக்கட்சியின் தலைவர் சக்திவேல், லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வித்யாதரன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது இருவரும் கார்த்திக் குறித்து குமுறித் தள்ளி விட்டனர்.

அமரன் பட இயக்குநர் மூலமாக
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தேர்தலுக்காக கூட்டணி அமைக்க முடிவு செய்திருந்தபோது கார்த்திக், அமரன் பட இயக்குநர் மூலம் எங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். நாங்கள் எக்காலத்திலும் நடிகர் காரத்திக்கை தலைமையாக ஏற்க மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் கூட்டணிக்கு ஒத்துக்கொண்டனர்.

சேதுராமனின் அறிவிப்புக்கு எதிர்ப்பு
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தையும் கூட்டணியில் இணைத்தார் கார்த்திக். எங்கள் கூட்டணி அமைந்த பிறகு ஒரு நாள் செய்தியார்கள் சந்திப்பு நடந்தது. அப்போது சேதுராமன், நடிகர் கார்த்தியின் தலைமையில் விடியல் கூடடணி தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தார்.

தலைவரெல்லாம் முடியாது
அப்போது நாங்கள், தலைவராக ஏற்க முடியாது என்று அறிவித்தோம். ஒருங்கிணைப்பாளராக வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறோம் என்றோம். அதன் பிறகு கூட்டணிக்கான எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. கார்த்திக்கும் ஈடுபடவில்லை.

எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப்பில் பதில்
கூட்டணி தொடர்பான எந்த ஆலோசனைக்கும், கேள்விக்கும் எப்போதும் வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் பதில் சொல்கிறாரர். தனக்கு உலல்நிலை சரியில்லை. மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறுகிறார்.

கள்ளத் தொடர்பில்!
இதற்கிடையில் எங்களுடன் ஆலோசிக்காமல் வேறு கட்சிகளுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார். தொகுதி உடன்பாடு பேசாமலேயே வேட்பாளர்களை அறிவித்தார். அதிலும் பாதி பேர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். எங்கள் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்களை நிறுத்தியுள்ளார். இது கூட்டணி துரோகம் என்று குமுறித் தள்ளி விட்டனர்.
முடியலையே ராஜாக்களா, முடியலையே!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications