விவசாயத்தை மீட்டெடுக்க போராடுங்கள்.. தீக்குளித்த விக்னேஷின் உருக்கமான கடைசி பேச்சு #selfimmolation
சென்னை: நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் பேரணிக்கு முன்னதாக அழைப்பு விடுத்து பேசிய வாட்ஸ் அப் குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதில் காவிரியில் நீர் பெற்று விவசாயத்தை மீட்டெடுக்க போராடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்துக் கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

95 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் பேரணிக்கு அழைப்பு விடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் விக்னேஷ் பேசிய குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
நாம் அனைவரும் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடும் கோபத்தோடும் கிளர்ந்தெழுந்து போராடுவோம் என்று தொடங்குகிறது அந்த பதிவு.
விக்னேஷின் குரல் பதிவு இது:












Click it and Unblock the Notifications