விஜய் மதுராந்தகம் செல்லும் வழியில் ஷாக்.. அரசு பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..மறைக்கும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் கூட சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத அவலம் நிலவுகிறது. வண்டலூர் அருகே அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்வதால் சிறுமி பாலியல் வழக்கை காவல்துறையினர் மூடி மறைப்பதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மர்மகும்பல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவியை மயக்கமடைய செய்து பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி கழிவறையில் மயக்க நிலையில் இருந்த மாணவியின் உடலை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Girl Sexual harassment

கழிப்பறையில் நடந்த அதிர்ச்சி

சக மாணவிகள், ஆசிரியர்கள் மீட்டு பாதிக்கப்பட்ட மாணவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, முதலமைச்சர் விஜய் இன்று மாலை அங்கு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதனால் மாணவி பாலியல் தொல்லை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் மூடி மறைப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "இரு பாலரும் அந்த பள்ளியில் படிக்கிறார்கள். மாணவர் கழிப்பறை முன் பகுதியிலேயே உள்ளது. மாணவிகள் கழிப்பறை உள்ளே தள்ளியுள்ளது. கழிப்பறையை சுற்றி புதர் மண்டியுள்ளது. அருகிலேயே தடுப்பு சுவர் உள்ளது. ஏரிக்கரையில் இருந்து குதித்து அந்த பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். பாதுகாப்பற்ற இடத்தில் தான் கழிப்பறை இயங்கி வந்துள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும் மாற்று ஏற்பாடு செய்யவில்லை.

மூடிமறைக்க வேண்டாம்

மர்ம கும்பல் அந்த வழியாக ஏறி குதித்து தான் உள்ளே வந்துள்ளனர். மாணவியை மயக்கமடைய செய்து பாலியல் தொல்லையளித்துள்ளனர். பிறகு அதே வழியாக ஏறி குதித்து சென்றுள்ளனர். சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மூடிமறைக்காமல் மாணவிக்கு நீதி கொடுக்க வேண்டும். சக மாணவிகளுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். பாதுகாப்பான இடத்தில் கழிப்பறையை மாற்ற வேண்டும்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+