71ல் பாகிஸ்தானை வென்ற தினம்.. வெற்றி நாயகர்களுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி!
சென்னை: 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் விஜய் திவஸ் அதாவது வெற்றி தினமாக நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
1971ம்ஆண்டு நடந்த போரின் இறுதியில் வங்கதேசம் உருவானது. இந்த தினம் வங்கதேசத்தில் சுதந்திர தினமாகவும், இந்தியாவில் வெற்றி தினமாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இதில், பாகிஸ்தானுடன் நடந்த போரின்போது உயிர் நீத்த முப்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா-தமிழ்நாடு-கர்நாடகா- கேரளாவுக்கான ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜக்பீர் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி கமாடர் அமர் கே.மகாதேவன், தாம்பரம் விமான தளத்தின் ஏர் கமாடர் ரிப்பன் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்!












Click it and Unblock the Notifications