kutty story: பாஜக.. பண வீக்கம்.. எதையும் விட்டுவைக்கல.. ஒரே பாட்டில் போட்டு தாக்கிய விஜய்!
Recommended Video
சென்னை: தன்னை சுற்றி நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் பதில்அளிக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாட்டு அமைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காதலர் தினமான இன்று மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடி உள்ளார்.
அதில் நான் ஒரு குட்டி கதை சொல்லப்போகிறேன். என்னா சொல்ல வர்றேன்னு கவனமா கேளுங்க என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார். என்னப்பாக ஆங்கிலம் என்கிறீர்களா.. கொஞ்சம் கேளுங்க ப்ரோ.. வாழ்க்கை ரொம்ப சின்னது. எப்வும் சந்தோஷமாக இருங்க என்கிறார்.

பாடல் தொடக்கம்
இதன் மூலம் தன்னை சுற்றி அண்மைக்காலமாக நடந்து வரும் வருமான வரி சோதனை, அரசியல் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இருக்கிறது. அதாவது வாழ்க்கை மிகச்சிறியது என்பதால் எப்பவும் சந்தோஷமாகவே இருக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் பாடல் தொடங்குகிறது.

மிகப்பெரிய ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விஜய் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதில் விஜய் அரசியல் களத்திற்கு வரலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் விஜய்யை தங்களுக்கு ஆதரவாக மாற்றவும், அவரை ஒரு தரப்புக்கு எதிராக மாற்றவும் அரசியலில் முயற்சிகள் நடந்து வருவாக அவரது ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

டிசைன் டிசைன்னா
இந்நிலையில் ரசிகர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையிலும் பாஜகவை நேரடியாக தாக்கும் வகையிலும் இந்த பாடலின் ஒரு வரியில் "பல வித பிரச்சனைகள் வரும்.. போகும்.. கொஞ்சம் கூலாகவே இருங்க" என்று தங்லீசில் பதில் அளித்துள்ளார் விஜய். அத்துடன் டிசைன் டிசைனா பிரச்சனைகள் இனி வரும் என்றும் அவர் இளைஞர்களுக்கு (வேலையின்மை, வறுமை.. பணவீக்கம் என பல பிரச்சனை) பல வரும் என கூறியுள்ளார்.

அர்த்தங்கள்
இப்படி பாடலில் உள்ள எல்லா வரிகளுக்கும் அர்த்தத்தை தமிழில் மொழி பெயர்த்தால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதனை சந்தோஷமாக கடக்க வேண்டும், எதிர்க்கொள்ள வேண்டும் என்றே அமைகிறது இப்பாடல். அண்மையில் நடந்த வருமான வரி சர்ச்சை பிரச்சனையால் விஜய்யை காட்டிலும் அவரது ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்பாடல் செம்ம டானிக்காக இருக்கும்.

தன்னம்பிக்கை தரும் வரிகள்
வேகமாக போனா கவனமாக இருக்கனும், மெதுவாக போனால் நிதானம் அவசியம் என்கிறார் ஒரு வரியில். ஒரு பாடல் அதுவும் தன்னம்பிக்கை ரீதியான பாட்டு வைக்கிறார்கள் என்றால் அதில் உள்ள உள் அர்த்தத்தை விஜய் நிச்சயம் புரிந்தே பாடியிருப்பார். அத்துடன் நாமே ரசிகர்களுக்கு சொல்கிறோம் என்பதால் கூடுதல் கவனமாக இருப்பார் அந்த வகையில் இப்பாடல் முழுக்க முழுக்க எல்லாவற்றுக்குமான பதிலாக பார்க்கலாம்.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications