ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் 'மெர்சல்' விஜய் #Mersal #Thalapathy61
சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் 61 வது படத்திற்கு 'மெர்சல்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரர் உள்ளிட்ட மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெறி வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் படத்தின் தலைப்பு வெளியிடப்படாமலே விஜய் 61 என்ற ஹேஷ்டேக் டிவிட்டரை கலக்கி வந்தது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மெர்சல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரர் உள்ளிட்ட மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. டைட்டில் வெளியாகிய சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
இந்தப் படம் தேனாண்டாள் நிறுவனத்துக்கு 100-வது படமாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வருகிறது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications