விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள்
திருப்பூர்: தாராபுரத்தைச் சேர்ந்த இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் இளைய தளபதி விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு தேவையானதை செய்து தருபவர்களுக்கு மட்டும் இயக்கத்தில் முன்னுரிமை தருகிறார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. பண நாயகம் தான் உள்ளது. இவை எல்லாவற்றையும் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் பல முறை தபால் மூலம் தகவலை கொண்டு சென்றும் பலன் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தாராபுரம் விஜய் மக்கள் இயக்க நகர தலைவர் ஜாபர் சாதிக், நகர துணைத் தலைவர் ஜூபேர், நகர இளைஞரணி தலைவர் ராமதாஸ், நகர இளைஞரணி துணைச் செயலாளர் மாரிமுத்து, ஒன்றியத் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், இயக்க தொண்டர்களும் இயக்கத்தை முழுமையாக கலைத்துவிட்டார்களாம்.
இதன் அடுத்த கட்டமாக அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சின் தமிழக பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கிறிஸ்டினா சாமி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்துவிட்டார்களாம்.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இயக்க முன்னணி நிர்வாகிகளுக்கும் தூதுவிடும் படலம் அரங்கேறி வருகின்றதாம். இதற்கு ஏற்ப எதிர் முகாமில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்து வருகின்றதாம். இதில் குஷியான ஆம் ஆத்மி தரப்பு விரைவில் தமிழகத்தில் இருந்து பல முக்கிய இளைஞர்கள் ஆம் ஆத்மியில் இணைய உள்ளனர் என உற்சாகம் பொங்க சொல்கின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications