என்னது ஆயிரம் கோடி சம்பளமா? விஜய் வீட்டுல ரெய்டு விடுங்க! அப்பாவு அட்டாக்!
சென்னை: நடிகர் விஜய் ஆயிரம் கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இதனை சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர் அப்பாவு, வருமான வரித்துறை முதலில் விஜய் வீட்டுக்குதான் ரெய்டுக்கு போக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அண்ணாமலையை செட் செய்து வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் தலையாட்டுகிறது. எங்களை எல்லோரும் ஒர்க்கம் ஹோம் அரசியல் செய்கிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள் ஆனால் எங்கள் அரசியல் எங்கள் விமர்சகர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிரடி அரசியலாகும்.
தமிழக வெற்றி கழகத்தில் சாதி இருப்பதாக விமர்சனங்கள் எழுகிறது. உண்மையில் தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக சாதியை வளர்த்தது யார்? இது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆரும் இதே கழகத்தில் தான் வேலை பார்த்துவிட்டு 20 ஆண்டுகள் கழித்து உண்மை தெரிந்த பின் வெளியே வந்துவிட்டார். திமுகவால் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற முடியவில்லை பெரியாரின் கொள்கைகளையும் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பெரியார் அண்ணா என இருவரின் கொள்கைகளையும் நிறைவேற்றவும் ஒரே தலைவர் எங்கள் தலைவர் தான்.
நாங்கள் போராட்டக் களத்திற்கு வரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள் இரண்டு மாத காலம் காத்திருங்கள் எங்களின் போராட்டம் எந்த அளவுக்கு வீரியமானது என்று உங்களுக்கு தெரியும். திமுக கூட்டணியில் இருந்த வைகோவை எப்படி காலி செய்தார்கள் என்று தெரியுமா வெறும் ஆறு தொகுதிகளை கொடுத்துவிட்டு திமுக தனது சின்ன சின்ன வைத்தது. இன்றைக்கு மதிமுகவுக்கு என தனி எம்எல்ஏக்கள் கிடையாது.
எங்கள் தலைவர் ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர். அவர் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வருவரா?" என்று கேள்வி ஆதவ் அர்ஜுனா எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் கேள்வி எழுப்பியுள்ள சபாநாயகர் அப்பாவு, "ஆயிரம் கோடி சம்பளம் என ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். அப்படியெனில் த.வெ.க. தலைவர் விஜய் வீட்டீல் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications