அடப்பாவிகளா? தமிழ் கடவுள் முருகனுக்கும் அதிமுக கரை வேட்டியா?
தமிழ் கடவுள் முருகன் தொடரில் முருகனுக்கு அதிமுக கரை வேட்டியை கட்டி விட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சூரனை வதம் செய்ய பயிற்சி எடுக்கும் தமிழ் கடவுள் முருகனுக்கு கறுப்பு வெள்ளை சிவப்பு கரை வேட்டி கட்டி அழகு பார்த்திருக்கிறது விஜய் டிவி.
விஜய் டிவியில் தமிழ் கடவுள் முருகன் என்ற புராண தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த சிவ குமாரனை கார்த்திகைப் பெண்கள் வளர்த்து வருகின்றன.
வளர்ந்து வரும் முருகன் தற்போது போர் பயிற்சி எடுத்து வருகிறார். சூரனின் தலையை கொய்து எடுக்கும் சிரமமான பயிற்சி எடுத்து வருகிறார் பாலகன் முருகன்.

தேவர்கள் அச்சம்
சிவபெருமானிடம் சாகா வரம் பெற்ற சூரபத்மன், தேவர்களை விரட்டியடிக்கவே, அச்சமடைந்த தேவர்கள் சூரனை அழிக்க சிவபெருமானிடம் சரணடைகின்றனர். ஆண், பெண் இணையாமல் அக்னியில் இருந்து உதிக்கிறான் சிவமைந்தன்.

ஆறு குழந்தைகள்
அக்னி சுடரில் இருந்து ஆறு குழந்தைகள் கங்கையில் நீந்தி வர அதை சரவணப் பொய்கையில் பத்திரமாக சேர்க்கிறார் கங்கை. சிவ மைந்தனும், அரக்கியின் சூழ்ச்சியில் இருந்து தப்பி கார்த்திகை பெண்களிடம் வளர்கிறார்.

ஆயுதம் ஏந்தும் முருகன்
சிவமைந்தன் முருகன் இப்போதே ஆயுதம் ஏந்த தொடங்கி விட்டார். கயிறு கட்டி இழுப்பது, சக்ராயுதத்தை விடுவது என பலே பயிற்சி எடுக்கிறார் முருகன். ஆனால் பாவம் அவரால் சக்ராயுதத்தை பிரயோகிக்க முடியவில்லை.

மருமகனுக்கு பயிற்சி தரும் மாமன்
மருமகன் முருகனுக்கு மாமன் மகாவிஷ்ணுவே வந்து பயிற்சி தருகிறார். சக்ராயுதத்தை எப்படி உபயோகிப்பது என்று அவருக்குத்தானே தெரியும். சூரபத்மனின் கழுத்தை அறுப்பது எப்படி என்று இப்போதே பயிற்சி எடுக்கிறார். முருகனின் பயிற்சி இப்போதே சூரபத்மனை தூக்கம் இழக்கச் செய்கிறது.

அதிமுக கரை வேட்டியில் அழகன் முருகன்
சன் டிவியில் ஒரு டிரஸ் கோடு இருக்கும் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒரு சீனிலாவது கறுப்பு சிவப்பு கலர் ஆடை அணியவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். விஜய் டிவியில் அழகன் முருகனுக்கு அதிமுக கலரான கறுப்பு வெள்ளை சிவப்பு கரை வேட்டியை கட்டியிருக்கிறார். முருகா உனக்கே இந்த கதியா?
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications