குட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க நடிகர் விஜய் இன்று வந்திருந்தார்.
அவர் வழக்கமாக பயன்படுத்தும் காரை தகர்த்து சிறிய வகை காரில் வருகை தந்தார்.

சுமார் 10 நிமிடங்கள் அவர் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ் அரசு ஆகியோரிடம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
கருணாநிதி நலமாக வீடு திரும்புவார் என்று விஜய் அப்பொழுது ஸ்டாலினிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
மருத்துவமனை வெளியே பத்திரிகையாளர்கள் விஜயின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அதன் பிறகுதான் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக விஜய் தனது வீட்டுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது.
பத்திரிகையாளர்களின் பேட்டியை தவிர்ப்பதற்காக மற்றும் தனது ரசிகர் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பின் வாசல் வழியாக வெளியே சென்றுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நள்ளிரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
அப்போதும் பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டு அவர் முகத்தை மூடியபடி கிளம்பிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications