மகள், மனைவி, அக்கா.. குடும்பத்தோடு வாக்கு சேகரிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துள்ளார். இதனால் தனது வெற்றிக்காக முதலில் எட்டு வயது மகளைக் களம் இறக்கிய அவர் தற்போது மனைவி, அக்கா ஆகியோரையும் தனக்காக பிரசாரம் செய்ய களம் இறக்கியுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவருக்கு முத்தரையர் வாக்குகளால் பெரும் சவால் எழுந்துள்ளது.

முத்தரையர் சமூகத்தை விமர்சித்து அவர் பேசியதால், விஜயபாஸ்கரைத் தோற்கடிக்க முத்தரையர்கள் படு வேகமாக உள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரத்தை வித்தியாசமாக நடத்தி வருகிறார் விஜய பாஸ்கர்.
விராலிமலை தொகுதியில் தான் பிரசாரம் செய்யப் போகும் இடங்களுக்கு தனது மகள் பிரியதர்ஷினியையும் அழைத்துச் சென்று பேச வைத்தார்.
8 வயதேயாகும் பிரியதர்ஷனி தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு கூறி வாக்கு சேகரித்தார். மேலும் அதிமுக அரசின் நலத் திட்டங்களையும் அவர் கூறி ஓட்டு கேட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தனது மனைவி ரம்யாவையும் ஓட்டுக் கேட்க அனுப்பியுள்ளார் விஜயபாஸ்கர். ரம்யாவும், விஜயபாஸ்கரின் அக்காவும் தற்போது தொகுதியில் சுற்றி வந்து வாக்கு கேட்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவு தனக்கு சவால் உள்ளதால் விஜயபாஸ்கர் தனது குடும்பத்தையே பிரசாரத்திற்கு இறக்கியுள்ளது தொகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications