அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக விஜயதாரணி நியமனம்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக விஜயதாரணி எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவுப்படி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக, விஜயதாரணி நியமிக்கப்படுவதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், மகளிர் காங்கிரஸ் தமிழகப் பிரிவு தலைவியாக இருந்து வந்த விஜயதாரணி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

விஜயதாரணிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, அதிமுகவில் சேரப்போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்த சோனியாகாந்தி, நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். தன்னை ஒரு போராளி என்று சோனியாகாந்தி கூறியதாகவும் விஜயதாரணி தெரிவித்திருந்தார்.

சட்டசபை தேர்தலில் தற்போது வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ள விளவங்கோடு தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பும் கேட்டதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் விஜயதாரணியை சமாதானப்படுத்தும் விதமாக, தற்போது மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக விஜயதாரணிக்கு, வருகிற தேர்தலில் சீட் தரப்படாது என்றும், அதற்குப் பதிலாகவே, இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications