27 வருஷமா நான் இருக்கேன், ஆனா "வருஷம் 16" க்கு மட்டும் முக்கியத்துவமா.. குமுறும் விஜயதாரணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 27 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைக்கும் பெண்களுக்கு தருவதை விட, தற்போது சேர்ந்தவர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் தரப்படுவதாக தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விஜயதeரணி எம்.எல்.ஏ. ஆவேசமாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் நடிகை குஷ்புவைத்தான் குறி வைத்துப் பேசினார் என்பதால் சலசலப்பு கொடி கட்டிப் பறந்தது.

தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின், நடைபெற்ற முதல் செயற்குழுக் கூட்டம் இது.

முதலில், செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டது.

குஷ்புவைக் குறி வைத்து...

குஷ்புவைக் குறி வைத்து...

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயதாரணி எம்.எல்.ஏ., குஷ்புவைக் குறி வைத்து காட்டமாகப் பேசியதாக தகவல் அறிந்த கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அளவுக்கு முக்கியமாப் போச்சா...

அந்த அளவுக்கு முக்கியமாப் போச்சா...

கூட்டத்தில் விஜயதாரணி பேசியதாகக் கூறப்படுவதாவது, ‘காங்கிரசில் சேர்ந்து, 27 நாட்கள் கூட ஆகவில்லை. அவர்கள் சிறப்பு அழைப்பாளராக செயற்குழுவில் பங்கேற்கின்றனர். டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

27 வருஷமா நான் இருக்கேனே...

27 வருஷமா நான் இருக்கேனே...

ஆனால், 27 ஆண்டு களாக கட்சிக்காக உழைத்த பிறகே, நான் எம்.எல்.ஏ., பதவி அடைந்து, தற்போது தான் செயற்குழு கூட்டத்திற்கு வந்துள்ளேன். என்னை போல, பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என இவ்வாறு கூறப்படுகிறது.

குஷ்புவைத் தான்...

குஷ்புவைத் தான்...

விஜயதாரணி நேரடியாகப் பேரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் தாக்கிப் பேசியது குஷ்புவைத் தான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை...

பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை...

அதனைத் தொடர்ந்து முன்னாள் எம்.பி., கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''லோக்சபா தேர்தல் தோல்வி பற்றி இன்னும் நாம் விவாதிக்கவில்லை. பூத் கமிட்டியில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. எனவே, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். இது பற்றி விரிவாக பேச வேண்டும்,'' என்றார்.

25ம் தேதி மறுபடியும் பேசுவோம்...

25ம் தேதி மறுபடியும் பேசுவோம்...

அதற்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், ''வரும், 25ம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறேன். அப்போது நடக்கும் கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பற்றிய கருத்துக்களை தெரிவியுங்கள்,'' என்றார்.

சோனியா கையில் முழு அதிகாரம்...

சோனியா கையில் முழு அதிகாரம்...

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வரும் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துகளை பாதுகாக்கவும், அதை காப்பாற்றவும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம், நேற்றைய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில், உறுப்பினர்கள் அனைவரும் கையழுத்திட்டனர்.

ஆனா ஒரு அடி கூட இல்லை பாஸ்!

ஆனா ஒரு அடி கூட இல்லை பாஸ்!

எந்த ஒரு சலசலப்பு, கூச்சல் குழப்பம், அடிதடி, கலாட்டா ஏற்படாமல் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் :

மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் :

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் நில ஆர்ஜித சட்டத்தை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து, இன்று விவாதித்தோம். மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக கட்சியை பலப்படுத்துவது, அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதித்தோம். சிதம்பரம் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்திருந்தோம்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+