ஜெ. பட திறப்புக்கு ஆதரவா? விஜயதாரணிக்கு எதிராக வரிந்துக்கட்டும் திருநாவுக்கரசர்

ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகரை சந்தித்தது குறித்து விஜயதாரணியிடம் விசாரிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிமுகவின் ஸ்லீப்பர் செல்தான் என கன்பார்ம் செய்த விஜயதாரணி- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகரை சந்தித்தது குறித்து விஜயதாரணியிடம் விசாரிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரர் தெரிவித்துள்ளார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் இன்று திறக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தார்.

    இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலர் கலந்துகொண்டனர். ஆனால் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தன.

    விஜயதாரணி வாழ்த்து

    விஜயதாரணி வாழ்த்து

    ஆனால் சட்டசபையில் முதல் பெண் தலைவராக ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்ததற்காக சபாநாயகர் தனபாலை, நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.எல்.ஏவும் அக்கட்சியின் கொறடாவுமான விஜயதாரணி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அஞ்சலி செலுத்த விரும்பினேன்

    அஞ்சலி செலுத்த விரும்பினேன்

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்
    கட்சி புறக்கணித்ததாலேயே தான் படத்திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை எனவும், விழாவில் பங்கேற்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த தான் விரும்பியதாகவும் தெரிவித்தார்.

    ஜெயலலிதாவுக்கு புகழாரம்

    ஜெயலலிதாவுக்கு புகழாரம்

    பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா என்றும் இந்திரா காந்திக்குப் பிறகு தன்னை கவர்ந்தவர் ஜெயலலிதா என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

    நடவடிக்கை இருக்காது

    நடவடிக்கை இருக்காது

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் முடிவுப்படி படத்திறப்பு விழாவில் விஜயதாரணி பங்கேற்காததால் அவர் மீது நடவடிக்கை இருக்காது என்றார்.

    தலைமையிடம் புகார் அளிக்கப்படும்

    தலைமையிடம் புகார் அளிக்கப்படும்

    ஆனால் படத்திறப்பு விவகாரத்தில் விஜயதாரணி பேசியது குறித்து அவரிடம் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் செய்தியாளர்களிடம், விஜயதரணி பேசிய கருத்துகள் கட்சித் தலைமையிடம் கொண்டு செல்லப்படும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+