அதிமுக எம்எல்ஏக்கள் சேலையைப் பிடிச்சு இழுக்குறாங்க, அடிக்க வர்றாங்க.. விஜயதாரணி பகீர் புகார்!
சென்னை: சட்டசபையில் தன்னை பெண் அதிமுக எம்எல்ஏக்கள் புடவையைப் பிடித்து இழுத்ததாகவும், ஆண் எம்.எல்.ஏக்கள் அடிக்க வந்ததாகவும் பகீர் புகார் ஒன்றைக் கூறியுள்ளார் காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் விஜயதாரணி புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.
ஆனால் எதுவுமே தெரியாதது போல முதல்வர் ஜெயலலிதா அறிக்கை படிப்பதிலேயே கவனமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்றும் விஜயதாரணி கூறியுள்ளார். நேற்று சட்டசபையிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதற்கு முன்னதாக ஆளுங்கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் விஜயதாரணி.

சில வாரத்துக்கு முன்னாடி
சில வாரங்களுக்கு முன் நடந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சட்டசபை நுழைவாயிலில், எதிர்க்கட்சிகள் மறியலில் ஈடுபட்டபோது, என் மீது தாக்குதல் நடந்தது.

எதுவுமே தெரியாதது மாதிரி
ஆனால், அந்த மறியல் போராட்டத்தில் எதுவும் நடக்காதது போல் முதல்வர் அறிக்கையை படித்தார். இது தொடர்பாக நான் எழுந்து கேட்ட போது, எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டவில்லை.

கேலி பண்றாங்க
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என்னை கேலியும், கிண்டலுமாக பேசியதோடு அடிக்க வருவது போல செயல்பட்டனர். அசிங்கம், அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டினர்.

ஆள் வைத்து அடிக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா
இதை நான் மகா இழுக்காகவே கருதுகிறேன். முதல்வர், எம்.எல்.ஏ.க்களை வைத்து என்னை அடிக்க முயற்சி செய்தார்.

புடவையைப் பிடித்து இழுக்கிறார்கள்
பெண் எம்.எல்.ஏ.க்கள் என் புடவையை பிடித்து இழுத்தார்கள். இது போன்ற மோசமான சம்பவங்கள் சட்டசபையில் நடை பெற்றது. எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக சட்டசபையில் கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லை.

வாய்ப்பே தரலை எனக்கு
காவல்துறை மானியத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பேசிய பிறகு, எனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி கேட்டேன். ஆனால், சபாநாயகர் எனக்கு வாய்ப்பே தரவில்லை என்றார் விஜயதாரணி.












Click it and Unblock the Notifications