For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. இறப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே மோடி இரங்கல் தெரிவித்தது ஏன்?: விஜயதரணி

By Siva
Google Oneindia Tamil News

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக இரவு 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் 11.09 மணிக்கே இரங்கல் தெரிவித்தது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜெயலலிதா

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பலரும் புகார் தெரிவித்து வருகிறார்கள். அவர் இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் 11.09 மணிக்கே ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

மோடி

மோடி

ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழில் அவர் இரவு 11.30 மணிக்கு இறந்ததாக கூறும்போது பிரதமர் மட்டும் இரவு 11.09 மணிக்கே ஏன் இரங்கல் தெரிவித்தார். இந்த மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என நினைக்கிறேன்.

வீடியோ

வீடியோ

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவர் சிகிச்சை பெற்ற புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியிடவில்லை. சந்தேகங்களை போக்க அதிமுகவோ அல்லது மாநில அரசோ புகைப்படங்கள் அல்லது வீடியோவை வெளியிட வேண்டும்.

ஆளுநர்

ஆளுநர்

ஆளுநர் அப்பல்லோ மருத்துவமனைக்கு பல முறை சென்றும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஒரு மாநில முதல்வர் இறப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களிடம் உண்மையை கூற வேண்டும்.

English summary
Congress MLA Vijayadharini has asked an important question about former CM Jayalalithaa's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X