சகாப்தம் படத்திற்கு பொதுக்குழு கூட்டத்தில் விளம்பரம் தேடிய விஜயகாந்த்
கோவை: ஒரு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பற்றி பேசுவார்கள், கூட்டணி பற்றி திட்டமிடுவார்கள். ஆனால் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் தனது மகன் அறிமுகமாகும் சினிமா படத்திற்கு விளம்பரம் தேடியுள்ளார் விஜயகாந்த் என்கின்றனர் கூட்டத்திற்கு போனவர்கள்.
போன ஆட்சியில 2 முதல்வர், இந்த ஆட்சியலையும் 2 முதல்வர் இருக்காங்க. 5 முதல்வர் இருந்தாலும் கவலையில்லை நான் ஜெயலலிதாவை விமர்ச்சிப்பேன் என்று கூட்டத்தில் அரசியல் பற்றி கொஞ்சம் பேசிய விஜயகாந்த், இளைஞர்களாகிய நீங்க கட்சியை வளர்க்க பம்பரமா சுத்தனும் என்றார்.
உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் நீங்களும் இளைஞர்தான் என்று குரல் கொடுக்கவே, உற்சாகமான விஜயகாந்த், நானும் இளைஞன்தான் ஒரு படத்தில ஹீரோவா நடிக்கப் போறேன் என்றார். இதைக்கேட்டு கூட்டத்தில் உற்சாக விசில் பறந்தது.

மகனுக்கு ரசிகர் மன்றம்
என்னோட பையன் 'சகாப்தம்' படத்துல நடிச்சிட்டு இருக்கான். அவனுக்கு ரசிகர் மன்றம் தொடங்குறதுக்காக நிறைய பேரு கடும்போட்டி போடுறாங்க. சீக்கிரமே படம் ரிலீஸ் ஆகிடும்.
நானும் நடிக்கிறேன்
'சகாப்தம்' படத்துல நானும் நடிச்சிருக்கேன். ஒரு சண்டை காட்சியில வந்து பட்டையை கிளப்பியிருக்கேன்.
வெற்றி படமாக்கணும்
'சகாப்தம் படத்தை வெற்றிப் படமாக்கி 100 நாள் ஓட வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. ஊருக்குப் போனதும் எல்லோர்கிட்டயும் சொல்லுங்க.
எனக்கு எல்லாம் தெரியும்
நீங்க என்ன பண்றீங்கன்னு எல்லாத்தையும் நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். எனக்கு எதுவும் தெரியாதுன்னு மட்டும் நினைச்சுக்காதீங்க என்றார்.
பேசும்போதே மறந்துடுவேன்
பேச்சை முடிக்கும் முன்பாகவே பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொன்ன விஜயகாந்த், நான் பேச்சு வாக்குல நன்றி சொல்ல மறந்துவிடுவேன். அப்புறம் விஜயகாந்த் நன்றி சொல்லலை அப்படின்னு எழுதுவீங்க என்றார்.
சிபிஐ விசாரணை
மீண்டும் எதையோ ஆரம்பித்த விஜயகாந்த், நான் என்ன சொல்லிட்டு இருந்தேன். சி.பி.ஐ விசாரணை தேவை என்று சொன்னேன்ல யாருக்கு கடலூர் வைத்தியநாதனுக்கு என்று கூறினார். அதை பொறுக்காத கேப்டன் டிவியே நேரலையை நிறுத்திவிட்டதுதான் சுவாரஸ்யம்.
கணக்கு காட்டலையேப்பா
நீங்க எல்லோரும் வாங்கிட்டுப்போன கட்சி நிதிக்கான புத்தகத்தை பலரும் திருப்பிக் கொடுக்காம இருக்கீங்க. அதை உடனடியாக கொண்டு வந்து கொடுங்க என்று தேமுதிகவின் ஏ.ஆர்.இளங்கோவன் கூற, கூட்டத்தில் இருந்த ஒருவர், 'கட்சி ஆரம்பிச்சதுல இருந்து இன்னும் வரவு செலவு கணக்கே காட்டாமல் இருக்கீங்க... அதை முதல்ல காட்டுங்க...என்று குரல் கொடுத்தனராம். ஆனால் அது காற்றோடு கலந்து போனது. முற்றும் போட்டு முடித்துவிட்டனர் தேமுதிக கூட்டத்தை.
எதுவுமே இல்லையே
பொதுக்குழுவில் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதைப்பற்றி ஒரு புள்ளி கூட வைக்கவில்லை விஜயகாந்த். அதேபோல பொதுக்குழு கூட்டத்தை சினிமா விளம்பர மேடையாக்கி மகன் படத்திற்கு விளம்பரம் தேடிக்கொண்டார் என்றும் தேமுதிகவினர் கிசுகிசுத்து சென்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications