விஜயகாந்த்தின் தம்பி பால்ராஜ் மரணம்.. கடைசி காலத்தில் அதிமுகவில் சேர்ந்தவர்!
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தம்பி பால்ராஜ் மதுரையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 57.
விஜயகாந்த்தின் சொந்த்த தம்பி பால்ராஜ். 57 வயதான இவர் தனது குடும்பத்துடன் மதுரை அண்ணா நகரில் வசித்து வந்தார். மிகவும் வறுமையான நிலையில் இருந்து வந்தவர் பால்ராஜ். சில வருடங்களுக்கு முன்பு இவர் அளித்த நக்கீரன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது நிலை குறித்து அறிந்ததும், இவரது நெருங்கிய நண்பரும், மதுரை அதிமுக தலைமைக் கழக பேச்சாளருமான வைகை பாண்டி, பால்ராஜை, அமைச்சர் செல்லூர் ராஜிடம் அழைத்துச் சென்று கடந்த வருடம் அதிமுகவில் சேர்த்து விட்டார். ஆனால் அதிமுகவில் சேர்ந்த பிறகும் கூட பால்ராஜின் நிலைமை மாறவில்லை. பெரிய அளவில் அங்கும் உதவிகள் கிடைத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று மதியம் பால்ராஜ் மரணமடைந்தார். இறுதிச் சடங்குகளில் விஜயகாந்த் கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் மதுரை செல்கிறார்.
படம்: நக்கீரன்












Click it and Unblock the Notifications