மகனின் பொள்ளாச்சி ஷூட்டிங்கில் இருந்தபடியே தேர்தல் முடிவுகளை பார்க்கும் விஜயகாந்த்
பொள்ளாச்சி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி சென்றவர் அங்கிருந்தபடியே தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளவிருக்கிறார்.
தமிழக நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. மேலும் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேமுதிகவுக்கு சாதகமாக இல்லை. இதனால் தேமுதிகவினர் கவலையில் உள்ளனர்.

ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்னவென்றால் தனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். சகாப்தம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் பொள்ளாச்சியில் தங்கி படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்பதால் விஜயகாந்த் பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரோ படப்பிடிப்பை பாதியில் விட்டுவிட்டு வர முடியாது என்று கூறி பொள்ளாச்சியில் இருந்தே தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள தீர்மானித்துள்ளாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications